இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை.!
24 tamilnadu fisherman released in srilanka
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 20க்கும் மேற்பட்ட மீனவர்களையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று 24 மீனவர்கள் சிறையிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் வர தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
24 tamilnadu fisherman released in srilanka