தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.,!!
2500 kg beedi leaves seized in thoothukudi
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.,!!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கடலோர காவல்படையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த மினிலாரியில் இருந்து சிலர் தப்பி ஓடினர். இருப்பினும், போலீசார் தப்பியோடியதில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், அவர் மினிலாரியை ஓட்டிவந்த தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த சார்லஸ் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மினிலாரியை சோதனை செய்ததில் 49 மூட்டைகளில் 2,500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்தப் பொருட்கள் அனைத்தும் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் சார்லசை கைது செய்து, மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் தப்பி ஓடியவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
2500 kg beedi leaves seized in thoothukudi