குறைவதை போல் குறைந்து அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,610க்கும், சவரன், ரூ.36,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.15ரூபாய் அதிகரித்து ரூ.4,625க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து, ரூ.60க்கும், கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->