தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு 2வது வரிசையா..? உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு..!! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் வரும் ஜனவரி 13 முதல் 29ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஹாக்கி கோப்பை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்க பிரதிநிதிகள், ஹாக்கி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

விழா மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா உட்பட 8 அரசியல் பிரமுகர்களுக்கு முதல் வரிசையிலும் ஓய்வு பெற்ற மூத்த ஹாக்கி வீரர்களுக்கு இரண்டாவது வரிசையிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும் தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரருமான வாசுதேவன் பாஸ்கரன் கடுப்பாகி நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

அப்போதா அவர் "இது என்ன கட்சி நிகழ்ச்சியா..? இல்லை விருது வழங்கும் நிகழ்ச்சியா..? ஹாக்கி வீரர்களுக்கு பின் வரிசையில் இருக்கை போடுவீங்க..?? என கோபத்துடன் பேசினார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதிர்ந்து போனார். பின்னர் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு வாசுதேவன் பாஸ்கரன் உட்பட நான்கு ஹாக்கி வீரர்களுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. 

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஹாக்கி வீரர்கள் அவமதிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக வாசுதேவன் பாஸ்கரன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd row seats for athletes in Udhayanidhi attend event


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->