அங்கன்வாடி மையத்தில் கூல்ட்ரிங்ஸ் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த 3 குழந்தைகள்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் செல்வழிமங்கலம் பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுமார் 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு வந்த ஜம்போடை தெருவைச் சேர்ந்த வம்சிகா (வயது 2), யோகேஷ் (வயது 3), பிரியதர்ஷினி (வயது 2) ஆகிய மூவரும் அங்கன்வாடி மையத்தில் குளிர்பான கேனில் இருந்த மண்ணெண்ணெயை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர்.

இதில், 3 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 குழந்தைகளும் உடனடியாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செல்வவழிமங்களத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகளை முறையாக பராமரிக்காத அங்கன்வாடி மைய ஊழியர் சோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். 

சிகிச்சை பெற்று வரும் 3 குழந்தைகளில் யோகேஷுக்கு மட்டும் தொண்டை பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணையை மூன்று குழந்தைகள் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 children drank kerosene thinking it was cooldrings in kanchipuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->