எலும்புக்கூடு மீட்கப்பட்ட வழக்கில், இளைஞரை கொலை செய்த பெண் உட்பட 3 பேர் கைது!
3 people including the woman who killed the youth arrested in the case of recovery of the skeleton
தென்காசி மாவட்டத்தில், இலத்தூர் பகுதி சுண்டகாட்டு தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மாடசாமி. இவர் 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.
இதைப்பற்றி மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.மாரிமுத்து வசித்து வரும் அதே பகுதியில் லட்சுமணன் என்பவரின் வீடு பயன்படுத்தப்படாமல் இருந்தது.
சில நாட்களுக்கு முன் தனது வீட்டை லட்சுமணன் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். அப்போது வீட்டின் கழிவுநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அளித்த புகாரின்பேரில் இலத்தூர் போலீஸார் அங்கு சென்று, எலும்புக்கூடை தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தடயவியல் சோதனையில் கழிவறையில் கிடந்த எலும்பு கூடு காணாமல் போன மாரிமுத்துவின் மகன் என தெரியவந்தது.
அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த பேச்சியம்மாள் என்ற பிரியா (24) வீட்டைக் காலி செய்துவிட்டு, கோவைக்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனே கோவை விரைந்த போலிசார் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பேச்சியம்மாளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருக்கும், மாடசாமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது . மாடசாமி தொடர்ந்து அவரை தொல்லை தரும் வகையில் டார்ச்சர் செய்ததால், கழுத்தை நெறித்து பேச்சியம்மாள் கொலை செய்துள்ளார்.
பிறகு அந்த பகுதியில் குடியிருக்கும் தனது தாய் மாரியம்மாள் (44) மற்றும் 17 வயது தம்பி ஆகியோருடன் சேர்ந்து, வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் உடலை வீசி உள்ளார்.ஊர் மக்களிடம் எதுவுமே தெரியாததுபோல் இயல்பாக இருந்துள்ளனர்.
அதன் பின் நடந்த மாடசாமியின் சகோதரி திருமணத்திலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தாய், தம்பி, குழந்தைகளுடன் கோவைக்கு சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து, பேச்சியம்மாள், அவரது தாயார் மாரியம்மாள், 17 வயது தம்பி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
3 people including the woman who killed the youth arrested in the case of recovery of the skeleton