மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 34 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள சகுல்புரா பகுதியிலிருந்து ரகோபூர் சக்கா பகுதியை நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்பொழுது அதிகாலை கோட்வாலி பகுதியில் சாலையில் சென்ற எருமைமாட்டின் மீது பேருந்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 34-பேர் காயமடைந்தனர். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து கோட்வாலி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முதற்கட்ட விசாரணையில், வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டதாகவும், பேருந்தில் இருந்தவர்கள் ஓட்டுநரை மெதுவாகச் செல்லும்படி கூறியபோது மாவட்டத் தலைமையகத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சாலியா பகுதியில் எருமை மடு ஒன்று  வந்துள்ளது.

இதில் விலங்கைக் காப்பாற்றும் முயற்சியில் ஓட்டுநர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து, எருமை மாடு மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

34 Injured after bus overturns in madhyapradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->