சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு 35 இடங்களில் நவீன தங்குமிடம் - சென்னை மாநகராட்சி ஆணையர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் வீடு இல்லாமல் தெருவோரம் தங்கி வசிப்பவர்களுக்கு 35 நவீன தங்குமிடங்களை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தங்குமிடங்கள் கட்ட 11 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மாதவரம், மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் வீடற்றவர்களுக்கு 24 தங்குமிடங்கள் கட்டுவதற்கான மதிப்பீடுகள் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் காகன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த 6 மாதங்களில் இந்த தங்குமிடங்கள் கட்டப்படும் இதில் தங்குவதற்காக ஜார்ஜ் டவுன், கோடம்பாக்கம், மெரினா கடற்கரை, கோயம்பேடு, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் வீடு இல்லாதவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தங்குமிடங்களில் அவர்களுக்கு இலவச சேவைகள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

35 modern shelters for the homeless in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->