மக்களே உஷார்... 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் "வெப்பம் அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 2 நாட்களுக்கு நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியது. இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 104.90 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சனலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 degree Celsius temperature increase for next 2 days in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->