கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் மேலும் 4 பேர் கைது..!!
4 More Peoples Arrested in Kallakurichi Hooch Tragedy
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம், மாதவசேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மெத்தனால் கலந்து கள்ளச் சாராயத்தை குடித்ததில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் கள்ளச் சாராயம் விற்றதாக கூறி கருணாபுரத்தைச் சேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் முதலில் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து சின்னதுரை, ஜோசப்ராஜ், ஷாகுல் ஹமீது, கண்ணன், ராமர் ஆகிய 5 பேரை மெத்தனால் கலந்த சாராயத்தை விற்றதாக கைது செய்துள்ளனர். இதையடுத்து புதுச்சேரி மடுகரையைச் சேர்ந்த மாதேஷ், சாராயத்தில் கலந்துள்ள மெத்தனாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து வாங்கியதாக கைது செய்யப் பட்டார்.
மேலும் பண்ருட்டியில் உள்ள சக்திவேல் என்பவரது கடை ஜி. எஸ். டி. பில்லை உபயோகப் படுத்தி இந்த மெத்தனாலை வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு மாதேஷ் அனுப்பி வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த கள்ளச் சாராய விறபனையில் தொடர்புடையதாக சூளாங்குறிச்சியை சேர்ந்த கதிரவன், கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த தெய்வீகன், தியாக துருகம் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி மற்றும் அரிமுத்து ஆகிய 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
4 More Peoples Arrested in Kallakurichi Hooch Tragedy