4 பேர் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம்! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் புள்ளம்பாடி விடுதியில் தங்கி அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார். பின்னர், லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). இருவரும் காதலித்து வந்துள்ளனர் அனால் அந்த மாணவியிடம் இவர் திருமணமானதை மறைத்து மாணவியை ஏமாற்றி காதலித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 13ம்தேதி மாணவிக்கு விடுமுறையாக இருந்த நிலையில் அவர் வீட்டுக்கு சென்ற மாணவியை, சமயபுரம் டோல்கேட் அருகே மாருதி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு காதலன் அழைத்து சென்றுள்ளார்.  அங்கு மாணவிக்கு கூல்டிரிங்சில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார் சிரம்பலரசன். இந்நிலையில் அவரது நண்பர்கள் 4பேருடன் இவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

மாணவியை வெளியே சொன்னால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என காதலன் மிரட்டியுள்ளார். இந்நிலையில், மாணவியிடம் மாற்றம் காணப்பட்டதால் கடந்த மாதம் 31ம் தேதி இவரது தாய் விசாரித்ததில் மாணவி நடந்த சம்பவத்தையும், மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுதொடர்பாக லால்குடி மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்,  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் காதலன் சிலம்பரசனை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people gang raped the student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->