08 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறைதண்டனை..!
40 years in prison for the youth who raped an 8 year old girl
எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் எட்டு வயது மகள் அதே பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வந்தார்.
கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சிறுமியை அவரது தாத்தா அழைப்பதாக கூறி காந்தி நகரை சேர்ந்த 24 வயதுடைய கூலி தொழிலாளி அஜித், அருகேயுள்ள சோலைக்குள் சிறுமியை அழைத்துச் சென்று அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின் தப்பியோடிய அஜித்தை ஊர்மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணைக்கு பின் குறித்த வாலிபர் மீது போக்சோ உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஜனவரி 18-ஆம் தேதி கைது செய்தனர்.
சிறுமி பாலியல் வழக்கு ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. குற்றவாளியான அஜித்திற்கு, 40 ஆண்டுகள் நான்கு மாதம் சிறை தண்டனை மற்றும், 15 ஆயிரத்து, 400 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து அஜித் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவர் கடந்த, 2022-இல் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இவருக்கு 32 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்துள்ளார். மீண்டும் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
40 years in prison for the youth who raped an 8 year old girl