பாசப்போராட்டத்தில் உயிரை விட்ட 5 நாய்களும், உரிமையாளரும்.! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அலங்காநல்லூர் பகுதியில் புதுப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். இவருக்கு நாய் வளர்ப்பதில் அதிகப்படியான ஈடுபாடு இருந்தது. அவர் ஐந்து நாய்களை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.

அவர் வேட்டைக்கு செல்லும் போதெல்லாம், அந்த நாய்களை அழைத்துச் செல்வது வழக்கம். இத்தகைய நிலையில், கொண்டையம்பட்டி பகுதியில் காட்டுப்பன்றி வேட்டைக்கு இரவு நேரத்தில் மாணிக்கம் சென்றார். 

அப்பொழுது அசோக்குமார் என்பவர் தனது பூந்தோட்டத்தில் மின் வேலி அமைத்திருந்தார். அதை கண்ட நாய்கள் தன்னுடைய எஜமானை காப்பாற்ற மின் வேலையை மிதித்து துடித்து துடித்து உயிரிழந்தது. இதை தொடர்ந்து நாய்களை காப்பாற்ற மாணிக்கம் முயன்றதால் அவருக்கும் மின்சாரம் தாக்கியது. 

எனவே அவரும் அவரது பாச நாய்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 dogs Trying To Save Madurai alanganallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->