ஆஃபாயிலில் பெப்பர் அதிகம்.. உணவகத்தை அடித்து உடைத்த மது போதை ஆசாமிகள்..!
5 members arrested in
ஆஃபாயிலில் பெப்பர் அதிகம் இருந்ததால் சமையல் மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தினர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி செல்லும் வழியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்ரு இயங்கி வருகிறது. அந்த கடைக்கு 4 பேர் மது போதையில் உணவருந்த வந்துள்ளனர். அப்போது, ஆஃபாயில் கேட்டுள்ளனர். ஆஃபாயிலில் அதிக அளவு பெப்பர் போட்டு கொடுத்துள்ளனர். இதனால், மது போதையில் இருந்தவர்கள் தகராறில் ஈடுப்பட்டனர். இது குறித்து கடையின் உரிமையாளர் , ஊழியர்களையும் தாக்கி கடைகளில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதுகுறித்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குடிபோதையில் கடை சூறையாடிய சம்பவம் பதிவானது. இதனை வைத்து, பிரவீன், பிரபு, கௌதமன், நட்ராஜ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.