பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி: மம்தா, ராகுல், ஸ்டாலின் வாழ்த்து!
DMK CM Stalin wish Indian Team IND vs PAK
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. விராட் கோலி தனது அதிரடி சதத்துடன் இந்திய வெற்றிக்கு அடித்தளமிட்டார்.
தொடர் வெற்றிகளால் இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும் சூழலில் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றியை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விராட் கோலியின் சதத்திற்கும் அணியின் சிறப்பான ஆட்டத்திற்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதேபோல், மத்திய அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
DMK CM Stalin wish Indian Team IND vs PAK