கொள்ளையடிக்க பக்கா பிளான்? 50க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரையில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலை கிராமப் பகுதிகளான இந்த பகுதிகளில் வனவிலங்குகள் வருவதால் பாதுகாப்பிற்காக வீடுகளில் பொதுமக்கள் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வீடுகளின் வளர்க்கப்படும் நாய்களை மறுமணவர்கள் சிலர் விஷம் வைத்து கொலை செய்ததாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதன்படி உசிலம்பட்டி, கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபடி, நரியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீடுகளில் கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 dogs killed in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->