பெண்குழந்தைகளுக்கு 50 ஆயிரம் உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் சேர விரும்பும் பெற்றோருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் 1992ம் ஆண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் பல வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, சமுதாயத்தில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் உணர்வோடும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்திட வேண்டும் என்பது தான். இதனிடையே கல்வியில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் வகையில் 2001ம் ஆண்டு மறு வடிவாக்கம் செய்யப்பட்டுள்ள பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் சிறு குடும்ப முறையினை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்த திட்டத்தின் படி ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பிறப்பு சான்று, பெற்றோரின் வயது சான்று, பிறப்பு சான்று அரசு மருத்துவரின் சான்று , குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை), வருமான சான்று ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, இருப்பிட சான்று போன்றவற்றை பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2வது பெண் குழந்தையின் 3 வயதுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும்” என்றுத் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? 

பொதுவாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தி அடையும் முன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். முதல் பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் கூட நீங்கள் இந்தத் திட்டத்தில் தாராளமாக விண்ணப்பிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 thousand scholarship to girl babys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->