திண்டுக்கல் : மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி விபத்து - 6 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் நல்லூரான்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (37). இவரது மனைவி வீரம்மாள்(30). இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் தான்தோன்றிமலைக்கு சென்றார்.

பின்பு அங்கிருந்து நல்லூரான்பட்டி பகுதி நோக்கி வந்தபோது கோவில்பட்டி அருகே, அவ்வழியாக வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பிரபாகரன், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் மினி வேன் ஓட்டுனர், அவரது மனைவி ஆகிய ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 injured in motorcycle minivan accident in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->