7 மாத குழந்தை கடத்தல்.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கார்த்திக், இசக்கியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு பிரியங்கா என்னும் 7 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் 20 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி பிரான்சிஸ் தலைமையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்போன் சிக்னல், சிசிடிவி கேமராக்கள் மூலமாக குழந்தையை கடத்தியவர்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 அதன்பின் அதே பகுதியைச் சேர்ந்த கனி(57), முத்துசெல்வி(30) ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்(34) போன்ற மூன்று பேரும் குழந்தையை கடத்தி ஆலங்குளத்தில் விற்க முயற்சி செய்தபோது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 Month baby kidnapped police under arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->