தமிழகத்தில் 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.! முழு லிஸ்ட் இதோ.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,

1) பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2) சென்னை காவல்துறை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையரா மகேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3) சென்னை மத்திய குற்றப்பிரிவு-III துணை ஆணையராக ஆரோக்கியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4) சென்னை மத்திய குற்றப்பிரிவு-I துணை ஆணையராக ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5) மாநில குற்ற ஆவண காப்பகத்தின் காவல் கண்காணிப்பாளராக நாகஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் போக்குவரத்து துறை ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6) கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ராஜராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7) சேலம் நகர (தெற்கு) துணை ஆணையராக மதிவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 police officers transferred in TamilNadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->