காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்ட மழையால் 30 முகாம்களில் 849 பேர் தஞ்சம்!
849 people sheltered in 30 camps due to the rain that overturned Kanchipuram
பெஞ்சல் புயல் நேற்று (நவம்பர் 30) மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடந்த பின்னர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் தாலுகாவில் அதிக மழை பெய்துள்ளதுடன், மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மழை இல்லை.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது: "பெஞ்சல் புயல் மற்றும் அதனால் ஏற்படும் பலத்த மழை சேதத்தைத் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
30 இடங்களில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன, அதில் நேற்றிரவு 849 பேர் தங்கியிருந்தனர். அவர்களுக்கு சாப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 65 இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரை முழுமையாக வடிய வைக்கப்பட்டது.
17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, அவற்றை அப்புறப்படுத்திவிட்டோம். 5 குடிசை வீடுகள் இடிந்துள்ளன. தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
849 people sheltered in 30 camps due to the rain that overturned Kanchipuram