தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திலிருந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த ஜூலை 25ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 2 விசைப்படகுகள் உட்பட 9 மீனவர்களை சிறை பிடித்து சென்றனர்.

அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பிறகு ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதனை அடுத்து அவர்களை இன்று (ஆகஸ்ட் 8) வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்களின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடை உள்ள நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 9 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். மேலும் இரண்டு விசைப்படகுகள் மீதான வழக்கு வரும் செப்டம்பர் 18ம் நடைபெறும் என்றும் அன்று படகின் உரிமையாளர்கள் ஆஜராகி படகு மீதான வழக்குகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனர். இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள 9 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 tamilnadu fishermen released by SriLankan court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->