17 வயது சிறுவனுடன் ஓடிய மாணவி 13 வயது சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது!
A 13 year old girl ran away with a 17 year old boy Boy arrested in Pocso
17 வயது சிறுவனை சிறுமி காதலித்து வந்த நிலையில் இருவரும் தனியார் விடுதியில் (OYO) இருந்தது தெரியவந்தது. சிறுவனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் பாட்டியுடன் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். 13 வயதான சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
நீலாங்கரை போலீசார் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது பள்ளி அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த மாணவி சுமார் ஒரு மணி நேரம் சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்ததுள்ளது. இதனைதொடர்ந்து சிறுவனின் செல்போன் எண்ணை போலீசார் டிராக் செய்த போது திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதியில் (OYO) இருந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த மூவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த 13 வயது சிறுமிக்கு பாட்டி செல்போன் பயன்படுத்த வேண்டாம் உள்ளிட்ட கட்டுப்பாடோடு வளர்த்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டின் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரமாக சிறுமி பணிபுரிந்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவனை சிறுமி காதலித்து வந்துள்ளார். பாட்டியின் தொல்லை தாங்க முடியாததால் நாம் திருமணம் செய்துகொண்டு எங்கேயாவது சென்று வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று சிறுவனை சிறுமி மூளை சலவை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமி சிறுவன் இருவரும் சேர்ந்து சிறுவனுடன் பணிபுரிந்து வந்த சக ஊழியரிடம் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று உதவி கேட்டதால் இருவரையும் காலை ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்க உதவிய நபரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வட மாநில சிறுவனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
A 13 year old girl ran away with a 17 year old boy Boy arrested in Pocso