மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை! விடிய விடிய போராட்டம்!
A contract employee sexually harassed a student Dawn struggle
பெண் வார்டன் மீது புகார் அளித்தால் திருச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். புகாரை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதி மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி திருச்சியில் உள்ளது. இந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் மாணவர்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் என்ற தகுதி தேர்வை எழுதி அதில் சரியான கட் ஆப் மார்க் எடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த கல்லூரியில் பொறியியல் படிக்க இடம் கிடைக்கும்.
சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க ஜே.இ.இ. அட்வான்ஸுடு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு சற்று கடினமாக இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் திருச்சி என்.ஐ.டி.யில் சேர வேண்டும் என விரும்புகிறார்கள். இங்கு மாணவர்கள், மாணவிகளுக்கென விடுதி வசதியும் உள்ளது.
இந்நிலையில், ஒப்பந்த ஊழியர் ஒருவர் இங்குள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. பின்னர், இது குறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரை தரக்குறைவாக வார்டன் பேசியதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஒப்பந்த ஊழியர் மீதும் வார்டன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துபோராட் டம் நடத்தி வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் உள்ள என்.ஐ.டி. இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் என்.ஐ.டி கல்லூரி வார்டன் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
English Summary
A contract employee sexually harassed a student Dawn struggle