போட்டி போட்டு விஷம் குடித்த காதல் திருமணம் செய்த தம்பதி... கோவையில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது,

கோவை மாவட்டம் ஓரைக்கால்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தசாமி (28). இவரது மனைவி சந்தியா (25). இவர்கள் இரண்டு பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று, சந்தியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம் என்று கூறி கணவரை அழைத்துள்ளார். ஆனால் அரவிந்தசாமி தற்போது பணம் இல்லை என்பதால் பிறகு போகலாம் என்று கூறியுள்ளார். ஆனால், சந்தியா நீங்கள் இப்போதே வரவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.

இதற்கு அரவிந்தசாமி நீ மட்டும் தான் விஷம் குடிப்பாயா, நானும் குடிக்கிறேன் என்று கூறி விஷம் குடித்துள்ளார். இதைப் பார்த்த சந்தியா, அரவிந்தசாமியிடம் இருந்த விஷத்தை வாங்கி அவரும் குடித்துள்ளார். இதையடுத்து போட்டி போட்டுக் கொண்டு இருவரும் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A couple suicide attempt by drinking poison in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->