அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..திருச்செந்தூரில் தைப்பூசம் விழா கோலாகலம்!
A crowd of devotees Thaipoosam festival in Tiruchendur
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை மறுநாள் திருச்செந்தூரில்அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.மேலும் 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதா லும், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தைப்பூசம் என்பதாலும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தவாறு உள்ளனர்.இதனால் சாலைகளில் முருகர் பக்தர்கள் கூட்டம் செல்வதை நம்மால் பார்க்கமுடிகிறது.
மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது.இதனை முன்னிட்டு அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா நாளை திங்கட்கிழமை நாளை நடைபெற உள்ளது. மேலும் இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெறஉள்ளது .அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
தைப்பூச திருவிழா நாளை மறுநாள் செவ்வாய் கிழமை நடக்கிறது. அன்றய தினம் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.மேலும் 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் .அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
English Summary
A crowd of devotees Thaipoosam festival in Tiruchendur