ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்.! மடக்கிப்பிடித்த பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் என்ற ஆர் பி எஃப் காவல்துறை அதிகாரி பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி சப்வே வழியாக கல்லூரி மாணவி ஒருவர் சென்றபோது அங்கு மது போதையிலிருந்த ஒரு நபர் அந்த இளம் பெண்ணிடம் அசிங்கமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபடும் வென்றுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் அங்கிருந்த பொது மக்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அந்த நபர் பொதுமக்களில் ஒருவரை தாக்கியிருக்கிறார். மேலும் அவர் ஆர் பி எஃப் காவல் அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்த பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த நபரிடம் விசாரணை செய்ததில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன் என்பது தெரியவந்தது.

காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ரயில்வே காவல் அதிகாரிகள் அந்த நபருக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரை அடிப்போம் என மிரட்டல் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ரயில்வே காவல் அதிகாரி மது போதையில் இருந்ததால் நாளை விசாரணைக்கு வர வேண்டும் என எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a drunken rpf police sexually misbehave with a law student get caught by public


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->