நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க 5 பேர் குழு அமைப்பு..  மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க 5 பேர் குழு அமைத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் தவிர்க்கவும் வெளி மாநிலத்தவர் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இறக்குவதை தடை செய்தும் விவசாயிகளிடமிருந்து மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் 6  தாலுகாவிலும் வருவாய் கோட்ட அலுவலர் அளவிலான அதிகாரிகள் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல " சட்ட ஆலோசகராக"(LEGAL ADVISOR)-ஆக பணியாற்ற இராணிப்பேட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா அழைப்புவிடுத்துள்ளார்.


இதுகுறித்து இராணிப்பேட்டைமாவட்டகாவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா விடுத்துள்ள அறிக்கையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில்" சட்ட ஆலோசகராக"(LEGAL ADVISOR)-ஆக பணியாற்ற  இன்று முதல் 15நாட்களுக்குள் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்விருப்பமுள்ளமற்றும் தகுதி வாய்ந்த நபர்கள்விண்ணப்பிக்கலாம் எனவும் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A five-member committee has been formed to prevent irregularities in direct paddy procurement centers District Collectors order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->