தஞ்சைக்கு வருகை தந்த ஜெர்மன் தம்பதி... 71 வயதில் காரிலேயே உலகம் சுற்றும் அதிசயம்.!
A German couple who visited Tanjore at the age of 71 is a miracle of traveling around the world in a car
உலகத்தை சுற்றி வர வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அது பலருக்கு கனவாக இருக்கும் ஆனால் சிலர் அதை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். வெளிநாட்டினர்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே இருக்கும். அவர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை சுற்றுலாவிற்கு என்று சேர்த்து வைத்து உலகின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு வருவார்கள். இதே போன்று தான் ஜெர்மனியைச் சார்ந்த 71 வயது தம்பதியினர் தங்களது உலக சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
ஜெர்மன் நாட்டைச் சார்ந்த 71 வயதான ஹூல்ஸ்சர் மற்றும் அவரது மனைவி ஐரின் ருனேலர் இருவரும் தங்களது சொகுசு காரையே வீடாக மாற்றி உலகம் சுற்றி வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களது பயணத்தை தொடங்கிய இவர்கள் தற்போது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த தம்பதியினர் பின்லாந்து, ஈரான், துருக்கி, கஜகஸ்தான், மங்கோலியா, சீனா என உலகில் 20 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். தற்போது மூன்று மாதங்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்துள்ளனர். இந்தபகுதிக்கு சுற்றுலா சென்றாலும் இவர்கள் ஹோட்டல்களில் தங்குவதில்லை. தங்களது சொகுசு காரையே வீடு போல அனைத்து வசதிகளுடனும் மாற்றி வைத்திருக்கின்றனர்.
தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்த இந்த தம்பதியினர் இந்த கோவில் மிகவும் பிடித்திருப்பதாகவும் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் மரபு ஆகியவற்றை தாங்கள் மிகவும் ரசித்ததாகவும் அதன் மீது மிகப்பெரிய மதிப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இங்கு தற்போது கோடை காலம் நிலவுவதால் மிகவும் கடுமையாக வெயிலின் தாக்கம் இருப்பதாக கூறினர்.
English Summary
A German couple who visited Tanjore at the age of 71 is a miracle of traveling around the world in a car