காதல் கண் மறைக்க, பெற்றோரின் பாசத்திற்கு மறுப்பு தெரிவித்த பட்டதாரி பெண்.!  - Seithipunal
Seithipunal


நாகர்கோவிலில் உள்ள கோட்டார் வணிகர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாரி வயது 20, இவர் ஒரு பட்டதாரி. இவருக்கு வருகிற 29-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண பத்திரிகைகள் தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில்  திடீரென வீட்டிலிருந்த செல்வகுமாரி மாயமானார். மகள் மாயமானது குறித்து அதிர்ச்சியில் இருந்த அவரது தாயார் கோட்டார் போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வக்குமாரியை தேடி வந்தனர். 

இதைத் தொடர்ந்து,  செல்வகுமாரி தனது காதலன் கார்த்திக் வயது 24 என்பவருடன் கோட்டார் போலீசில் தஞ்ச மடைந்தார்.  போலீசில் ஆஜரான இவர்களை போலீசார் விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில், நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்து காதலித்து வந்தோம். அனால் எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிற 29-ந்தேதி திருமணம் நடத்தவும் ஏற்பாடு செய்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் கார்த்திக் மற்றும் செல்வகுமாரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததால் அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். காவல் நிலையத்திற்கு வந்த செல்வகுமாரியின் பெற்றோர் செல்வகுமாரியை  தங்களுடன் வருமாறு அழைத்தனர். 

ஆனால் செல்வகுமாரி மறுப்பு தெரிவித்து காதலன் கார்த்திக்குடன் தான் செல்வேன் என்றும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். பெற்றோர் பலமுறை அழைத்தும் அவர் செல்ல மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பினர். ஆனால் கார்த்திக்கின் பெற்றோர் செல்வக்குமாரியை ஏற்றுக் கொண்டதால் 
காதல் ஜோடியை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A graduate girl refused her parents' affection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->