கார் மீது லாரி மோதி விபத்து! ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இருவர் படுகாயம், ஒருவர் உயிரழப்பு. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் அருகே செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது54). இவர் நகைக்கடை ஒன்று அதே பகுதியில் வைத்து அதை பார்த்து கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டம் மணியனூர் தெருவைச் சேர்ந்த இவரது நண்பர் அங்குஸ் (39). கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலுக்கு நண்பருடன் செல்வம் காரில் புறப்பட்டுள்ளனர். பின்னர் அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு நேற்று காரில் சேலம் திரும்பியுள்ளனர். இந்த காரை சேலம் மாவட்டம் சின்னநாயக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த சான்பாட்சா (36) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக இவர்கள் காரில் வந்து கொண்டிருந்த நிலையில் சேத்தூரை அடுத்த கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு அருகே கார் சென்றுகொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணம் செய்த செல்வம் மற்றும் அவரது நண்பர் அங்குஸ், டிரைவர் சான்பாட்சா ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்த போது செல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். மற்ற இரண்டு பேருக்கும் முதலுதவி அளித்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Lorry collided with a car and one person died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->