காட்டுப்பன்றிக்கு பதில் மனைவிக்கு எமனான மின்சார வேலி! துக்கம் தாளாமல் கணவன் செய்த விபரீத செயல்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் இறந்த சம்பவம் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவி விபத்தில் இறந்த துக்கம் தாளாமல் கணவர் தற்கொலை செய்து இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள பொம்மராஜாபேட்டை என்ற கிராமத்தைச் சார்ந்தவர் மேகநாதன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் துளசி. தனது வயலை காட்டுப் பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக  அதனைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார்.

இன்று காலை மேகநாதன் தனது மனைவி துளசியுடன் வயக்காட்டிற்கு சென்றுள்ளார். இதை எதிர்பாராத விதமாக துளசி மின்வெளியில் சிக்கியிருக்கிறார். இதில் மின்சாரம் பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்திருக்கிறார் மேகநாதன்.

மனைவி இறந்த அதிர்ச்சியில் மன வேதனையடைந்த மேகநாதன் அதே பகுதியிலுள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவமறிந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் காவல்துறையினர் வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நாளில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a man from thiruvallur commits suicude after his wife died in an unfortunate accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->