திருவள்ளூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கிடந்த நபர்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தூங்கிக் கிடந்த நபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசநல்லாத்தூர் கிராமத்தில் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கடம்பத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பூட்டி கிடந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் தூக்கில் தொங்கிய ஆண் நபர், ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man hanging in a decomposing state at home near Tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->