ஓடும் ரயிலில் செல்போன் பறித்த சிறுவன்.! பயணியின் கை-கால் துண்டான சோகம்.! - Seithipunal
Seithipunal


ஓடும் ரயிலில் பயணியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்(40). இவர் சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் ரயிலில் மொபைல் போன் பார்த்தபடி, ரயிலின் கதவு அருகே நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்ற போது, அப்துல் கரீம் கையில் வைத்திருந்த மொபைல் போனை, ரயில் பாதை ஓரமாக நின்றிருந்த 15 வயது சிறுவன் திடீரென பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளான்.

இதில் அப்துல் கரீம் நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் இடது கை மற்றும் இடது கால் துண்டாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், பலத்த காயமடைந்த அப்துல் கரீமை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையில் மேற்கொண்டதில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பதும், அந்த போனை 1700 ரூபாய்க்கு பாரிமுனையில் ஒருவரிடம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A passenger fell on his hands and feet as he snatched his cell phone from the moving train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->