சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபர் கைது.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது அந்த வழியாக ஸ்கூட்டரில் மூட்டையுடன் வந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் நல்லான்(26) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர், அவரிடமிருந்த 51 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் நல்லானையை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person who smuggled tobacco products was arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->