ஆளுநர் மாளிகையில் முன் போராட்டம் நடத்தப்படும்..சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி போக்குவரத்து துறை மூலமாக புதுச்சேரி அரசு துறைகளுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு பயன்படுத்தப்படும் 371 வாகனங்கள் காண டெண்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அதை புது டெண்டர் கோராமல் மீண்டும் அதே நிறுவனத்திற்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் மீண்டும் டெண்டர் விட முயற்சிகள் எடுக்க வேண்டும் இதை தவறும் பட்சத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் துணைநிலை ஆளுநர் மாளிகையில் முன் போராட்டம் நடத்தப்படும்  என  சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் கூறியுள்ளார்.

  இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம்கூறுகையில்:Pondy Marina, Sand Dunes Beach, Rubi Beach, Eden Beach, போன்ற பொழுதுபோக்கு மையங்கள் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதனை ஒப்பந்தம் செய்துகொண்ட தனியார் நிறுவனங்கள் கடந்த அக்டோபர் 2024 வரை தணிக்கை குழு அறிக்கையின் படி செலுத்த வேண்டிய நிர்வாக மற்றும் பராமரிப்பு தொகை ரூபாய் 3 கோடியே 57 லட்சம் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலுவை தொகைகளை அரசு இதுவரை வசூல் செய்யாதது ஏன். ஒரு மாத்ததிற்கு மின் கட்டணம் கட்ட தவறும் ஏழை எளிய மக்களுக்கு அபராதத் தொகை சேர்த்து வசூலிக்கும் நமது அரசு பல கோடி ரூபாய் வரி இழப்பு செய்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து உடனடியாக நிலுவைத் தொகையினை வசூலிக்க வேண்டும்.

மேலும் புதுச்சேரி போக்குவரத்து துறை மூலமாக புதுச்சேரி அரசு துறைகளுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு பயன்படுத்தப்படும் 371 வாகனங்கள் காண டெண்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அதை புது டெண்டர் கோராமல் மீண்டும் அதே நிறுவனத்திற்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் மீண்டும் டெண்டர் விட முயற்சிகள் எடுக்க வேண்டும் இதை தவறும் பட்சத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் துணைநிலை ஆளுநர் மாளிகையில் முன் போராட்டம் நடத்தப்படும் என  சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A protest will be held in front of the Raj Bhavan MLA Kalyanasundaram warns


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->