அடுத்த பிரதமரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் - ஆ.ராசா - Seithipunal
Seithipunal


திமுக-வின் 15வது பொதுக்குழு தேர்தலில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா எம்.பி., தனது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு குன்னூர், உதகை, என பல இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு இன்று வந்த அவருக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு மேளதாளம் முழங்க மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா எம்.பி., துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கிய தி.மு.க. தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவால்தான் நான் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆனேன். 

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றயுடன், கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டார். அவரிடம் நான் கோரிக்கை விடுத்ததும், தாளவாடியில் அரசு கல்லூரியை தொடங்கி வைத்தார். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் அடுத்த பிரதமரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Raja speech DMK chief MK Stalin will decide the next prime minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->