மோடியை எதிர்த்து பேச ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் இல்லை - ஆ.ராசா பேச்சு.! - Seithipunal
Seithipunal


மோடியை எதிர்த்து பேச ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் இல்லை - ஆ.ராசா பேச்சு.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா சிலை அருகே இன்று திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய ஆ.ராசா, “தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையாக இருந்தது.

அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா உடை அணிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மழை காலங்களில் தண்ணீரில் நீந்தி சென்று கண்காணித்து அதிகாரிகளுக்கு 24 மணி நேரமும் உத்தரவிட்டு மழை வெள்ளத்தை வடிய செய்தார். 

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை விட்டு சென்ற போது தமிழக அரசு 6 லட்சம் கோடி கடனில் தத்தளித்தது. இவற்றை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும், எடப்பாடி ஊதாரி தனமாக செலவு செய்ததை வெளிக்காட்டுவதற்காகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்த மாணவர்களின் படிப்பு செலவை தமிழக அரசு ஏற்று மூன்று லட்சம் முதல் 5 லட்சம் வரை வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலமாக ஆபத்து காலத்தில் உதவுவதற்கு தமிழக முதல்வர் கடவுளாக வருவார் என்பதை நிரூபித்துள்ளார். தமிழகத்தில் அண்ணா பெரியார் கலைஞர் உள்ளிட்டோர் இருந்த பொழுது மதம் உச்சத்தில் இல்லை. ஆனால் இன்று மதத்தால் உச்சகட்ட ஆபத்து உள்ளது. இந்த ஆபத்தை எதிர்த்து நிற்க அதாவது இந்தியாவில் மோடியை எதிர்ப்பதற்கு எந்த தலைவர்களுக்கும் துணிவு இல்லை.

ஆனால், மோடியையும் காவியையும் எதிர்த்துப் பேச தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை. தற்போது மோடி ஆட்சியில் நீதித்துறையில் காவி புகுந்துள்ளது. அண்ணா காலத்திலும் பெரியார் காலத்திலும் ஆர்எஸ்எஸ், பிஜேபி இல்லை. கலைஞர் காலத்தில் ஆர்எஸ்எஸ், பிஜேபி அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a rasa speach in public meeting in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->