மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!...பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி போக்சோ சட்டத்தில் கைது! - Seithipunal
Seithipunal


மதுரையை சேர்ந்த 12-ம் வகுப்பு  மாணவி ஒருவர், மதுரை புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கு  திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைடுத்து மாணவியை அவரது பெற்றோர்கள்  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில்,  மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவியின் வறுமையை பயன்படுத்தி படிப்புக்கு பண உதவி செய்வதாக கூறி கோவிலுக்கு அழைத்தும், விடுமுறை நாட்களில் கோவிலுக்குச் சென்ற மாணவியை கோவிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்திக் கொண்ட பூசாரி, மாணவியை கர்ப்பமாகிய நிலையில், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A shocking incident in madurai a priest who made a school girl pregnant was arrested under the pocso act


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->