திருப்பத்தூரில் பரபரப்பு!....தீ பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அருகே தீ பிடித்து எரிந்த காரில்,  கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள் இருந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நாத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில்,  கார் ஒன்று இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், காரில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள் இருந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே  காரில் கட்டுக்கட்டாக இருந்த  ரூ.2000 நோட்டுகள் போலி என தெரியவந்துள்ளது.

மேலும் கார் ஓட்டுனரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தான் சினிமா தயாரிப்பாளர் என்றும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A stir in Tiruppathur Rs 2000 notes were found in a burnt car


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->