கல்லூரியில் நடனமாடிய போதே இளைஞருக்கு அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி ஆண்டு விழாவின் போது நண்பர்களுடன் இணைந்து மேடையில் உற்சாகமாக நடனமாடிய மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் பகுதியைச் சார்ந்த கோகுல் என்ற மாணவன் காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான். தற்போது  இறுதித் தேர்வுகளை நெருங்கிக் கொண்டிருப்பதால் கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலும்  ஆண்டு விழா நடைபெற்று இருக்கிறது. அந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களின் போது சக மாணவர்களுடன் உற்சாகமாக நடனமாடிய கோகுல் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் மாணவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் மாணவனை சோதனை செய்த டாக்டர்கள் அந்த மாணவர் கோகுல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அழகப்பபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி ஆண்டுவிழா மேடையிலேயே இரண்டாம் ஆண்டு மாணவர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a student died on stage while dancing at a college function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->