#TNBUDGET2023 : ரூ.800 கோடி செலவில் சேலத்திற்கு புதிய திட்டம் அறிவிப்பு.!
A textile park will be set up in Salem at a cost of Rs 800 crore TN budget 2023
2023-24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் தொடங்கியது. சில நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதில் சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படுவது மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சேலம் மாவட்டம் ஜவுளித் தொழிலில் முக்கியப் பங்களித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
A textile park will be set up in Salem at a cost of Rs 800 crore TN budget 2023