பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இளநீர் வியாபாரி.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இளநீர் வியாபாரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் தேவனூர் கல்வெட்டு கிராம பகுதியை சேர்ந்தவர் செல்வராசு. இவருடைய மகன் இளநீர் வியாபாரி செல்வகுமார்(20). இவர், அதே பகுதியில் அரசுப் பள்ளியில் பயிலும் 16 வயதுடைய மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில் அவரிடமிருந்து தப்பித்து வந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு செல்வ குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young water dealer who tried to rape a schoolgirl was arrested in Ariyalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->