வாடகை வீட்டில் இருப்போர் மின் இணைப்புடன் ஆதார் இணைக்கலாமா? மின்வாரியம் தந்த விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை நினைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான பணிகளும் தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியுள்ளது. இதற்காக நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்ப வருகிறது. சில நுகர்வோர்கள் தங்கள் வீட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பை பெற்றுள்ளனர்.

 சிலர் ஒரே பெயரில் பல மின் இணைப்புகளை வாடகை வீட்டிற்கும் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் "தமிழ்நாடு மின் வாரியம் நுகர்வோருக்கு வழங்கும் மானியத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பை பெற்றிருந்தாலும் அவர்கள் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம். 

அதே போன்று வாடகை வீடுகளில் குடியிருப்போர் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம். அதற்கான வசதிகள் மின்வாரியம் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளார். இதனால் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்குமாறு மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhaar can linked with electricity connection for staying in rented houses


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->