மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது தமிழக அரசின் கொள்கை முடிவு! உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்ததால், அதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசும், மாநில அரசும் ஆதார் எண்ணுடன் எதை இணைக்க சொன்னாலும் (வங்கி கணக்கும் வாக்காளர் அட்டை) முன்பு எதிர்க்கட்சியாக இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தன.

தற்போது ஆளும் கட்சியாக திமுக வந்தவுடன், ஆதார் என் இணைப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, ஏன்? எதற்கு? என்ன காரணம் என்றே சொல்லாமல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்சாரதுறை அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கே சற்று குள்ளப்பதில் எந்த கருத்து சொல்லாமல், நமக்கு ஏன் வம்பு என்று ஜகா வாங்கின. 

இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் இது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றும், இது பாதுகாப்பானது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள்,  தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது எனவும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான்; முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar EB Nuber Coneect issue case SC order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->