தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.  - Seithipunal
Seithipunal


வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களின் முக்கிய சான்றாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசின் மானியங்களை பெற அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை தர வேண்டும் என்று, அரசின் நிதித்துறை சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும்.

மேலும், சில திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆதார் கேட்கப்படும் நிலையில் பொதுவான உத்தரவை நிதித்துறை பிறப்பித்துள்ளது.

 

 

ஆதார் அட்டை குறித்த மேலும் ஒரு முக்கிய செய்தி: 

ஆதார் அட்டை பதிவு செய்த நாளிலிருந்து சரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று, ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆதார் எண்ணில் மோசடிகள் செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக, தொடர்ந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, தங்களது அடையாள சான்றிதழ், முகவரிச் சான்றிதழ் சமர்ப்பித்து, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மை ஆதார் இணையதளம் அல்லது மை ஆதார் செயலி மூலம் இதனை செய்து கொள்ளலாம். மேலும், ஆதார் சேவை மையங்களில் நேரடியாகச் சென்றும் இதனை செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் பெயரில் உள்ள பிழைகள், புகைப்படங்களை பதிவேற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட விவரங்களையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar must TNGovt Announce 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->