இனி ஆதார் எடுப்பதில் பெரும் சிக்கல்! உங்களுக்கு 18 வயதாகிறதா? அப்ப இதை கவனிங்க! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒரு ஆதாரமாக அமைந்துள்ள நிலையில், இந்தியர் என்ற எந்த அடையாளம் இல்லாதவர்க்கு கூட முறைகேடான வகையில், சில சமூக விரோதிகளால் ஆதார் அட்டை வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. 

அண்மையில் கூட தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களுக்கு, மாரிமுத்து என்பவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை பெற்று தந்தது அம்பலம் ஆகியது.

இதில் அவர் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணை விரிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மாரிமுத்து கடந்த நான்கு ஆண்டுகளில் 100 பேருக்கு இதே போல் போலியாக ஆதார் அட்டை பெற்று தந்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து முறைகேடுகளை தவிர்க்க ஆதார் அட்டையில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

அதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்தால், அவர்களுடைய மனுக்கள் ஆன்லைன் மூலம் யூஐடிஐஏ ஒருங்கிணைந்த மையத்திற்கு முதலில் செல்லும்.

பிறகு அங்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே, இனி ஆதார் அட்டை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஒருவேளை ஆவணங்கள் சரிபார்க்கும் போது, ஏதேனும் சந்தேகம் இருந்தால், இது குறித்து விசாரணை நடத்த, சம்பந்தப்பட்ட நபரின் பகுதிக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் இது குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தாசில்தார் தலைமையில் ஆர்ஐ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்கள் நேரடியாக உண்மை தன்மையை கள ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணை அறிக்கைக்கு தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே, சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு ஆதார் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி போலியாக ஆதார் அட்டை எடுப்பது என்பது முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar New Rule for 18 trs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->