தனியார் பாலை தொடர்ந்து ஆவின் விலை உயர்த்தப்படுமா? பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஆரோக்யா நிறுவனம், இன்று முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 

* நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36இல் இருந்து 37 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65இல் இருந்து 67 ரூபாயாகவும், 
* நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.31இல் இருந்து 32 ரூபாயாகவும், ஒரு லிட்டர் ரூ.58இல் இருந்து 60 ரூபாயாகவும், 
* 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30இல் இருந்து 32 ரூபாயாகவும், 500 கிராம் தயிர் ரூ.37இல் இருந்து 38 ரூபாயாகவும், 1 கிலோ தயிர் ரூ.66இல் இருந்து 68 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவித்தாவது, "ஆவின் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளி சந்தையில் விற்கும் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவு தான். ஆவின் பால் விலை உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை. அமுல் பால் ஆவினுக்கு போட்டியாக கருதவில்லை" என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavin Milk Minister Raja Kannappan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->