அசத்தும் ஆவின்! தள்ளுபடி விலையில் தீபாவளி இனிப்புகள்!   - Seithipunal
Seithipunal


தள்ளுபடி விலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனம், தனது பால் உபபொருள்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூா்பாகு, குலாப் ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோா், சாக்லேட், தயிா் மற்றும் ஐஸ் கிரீம் போன்றவற்றையும் தயாரித்து ஆவின் பாலகங்கள் மூலமாகவும், சில்லறை விற்பனையாளா்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறது.

மேலும், பண்டிகை நாட்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனையையும் ஆவின் செய்து வருகிறது. நடப்பு ஆண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகளை ஆவின் நிறுவனம் வீரப்பனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகளை கூடுதலாக 20 சதவீத விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் சாா்பில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனிப்புகள், கார வகை அடங்கிய மூன்று காம்போக்களை ரூ. 300, ரூ.500 மற்றும் ரூ.900 என தள்ளுபடி விலையில் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறைந்த விலையில் உள்ள இந்த கம்போ பேக்குகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavin Sweets for diwali 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->