பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பா? - கோவையில் பீதியை கிளப்பிய நபர்! - Seithipunal
Seithipunal


பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பா? - பீதியில் உறையும் மக்கள்.!!

குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பிரியாணி உள்ளது. அதனால், விஷேச வீடுகளில் விருந்துகளில் பிரியாணி முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகி பிரியாணி பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கோயம்புத்தூரில் சமூக வலை தளங்களில் மோதலை உருவாக்கும் செயல்களில் ஈடுபடுபவர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், காவல் துறையினர் பல்வேறு வழக்குகளில் ரவுடிகளையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சமூக வலைதள கணக்குகளை கண்காணித்து வந்தனர். 

அப்போது டிவிட்டரில், கோயம்புத்தூரில் பிரியாணி கடையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்வதாக இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் பதிவு இருந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் மோதலை உருவாக்கும் உள்நோக்கத்தோடு பதிவு செய்து இருந்த, நபர் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

abortion tablet missing biriyani in covai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->